Click Click

Friday, January 21, 2011

காதல் கடிதம்



வெகு நாட்களாய் எழுத வேண்டும் என்று நான் நினைத்த கடிதமிது. உன்னை நான் சந்தித்த முதல் நாளிலிருந்து இன்று வரை நடந்தவற்றை அசைபோட்டபடி எழுத நினைத்த கடிதமிது.

சிறகுகளை நான் நடப்பதற்காக பயன்படுத்திய போது எனக்கு பறக்க கற்று தந்தவள் நீ. விழுந்திட போகிறாய் என உன்னையும் நடக்க வைக்க முயற்சி செய்தவன் நான்.

மனிதன் என்பவன் வெறும் எலும்புகளால் கட்டபட்டவன் என்று சொன்னவன் நான். எண்ணங்களால் கட்டப்பட்டவன் என்று சொன்னவள் நீ.

சந்திர சூரியனகளை வெறும் இரவு பகலை அடையாளம் காண மட்டுமே பார்த்தவன் நான். நீயோ சூரியனையே தொட நினைத்த‌ ஃபீனிக்ஸ் பறவை.

கணிதம் மட்டுமே அறிந்தவன் நான். கவிதையாகவே வாழ்ந்தவள் நீ. கணிதம் வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை நீ அறிவாய். கவிதையும் வாழ்வின் ஒரு பகுதி என்பதை நீ வரும்வரை நான் அறியவில்லை.

பாறையாய் நான்.பசுமரமாய் நீ.வெடிகுன்டுக்கு பிளக்காத பாறை வேருக்கு பிளந்த அதிசயம் என்ன? வைரமுத்து கேட்டது போல் இதில் யாருக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க? பாறைக்குள் புகுந்த வேருக்கா? இல்லை, வேருக்கு நெகிழ்ந்த பாறைக்கா?

உன்னை பார்த்த நாளிலிருந்து கடவுளிடம் சாபம் கேட்டு தவமிருந்தேன். என் உடல் முழுவதும் கண்களாவது என்ற‌ சாபம் வேண்டி,உன்னை காண கண்ணிரெண்டு போதாமல்.

உன்னை பார்க்க ஏதாவது ஒரு பொய் சொல்லி எத்துனை முறை வந்திருப்பேன்? கல்யானத்திற்கு ஆயிரம் பொய் சொல்லலாம் என்றால் காதலிக்க லட்சம் பொய் சொல்லலாம். அதுவும் உன்னை காதலிக்க கோடி பொய்கள் சொல்லலாம்.

ஆரம்ப காலங்களில் உன்னைக் கானும் பொதெல்லாம் என் காதல், புற்றுக்குள்ளே தன் தலையை இழுத்துக் கொள்ளும் பாம்பை போல மறைத்துக் கொள்ளும். ஆனால், நீ பேசத் தொடங்கிய ஒரிரு நிமிடங்களிலே கங்காருவின் குட்டிப் போல் மெல்ல எட்டி பார்க்கும்.

உன்னோடு நான் பழக ஆரம்பித்த பின் வந்த ஒரு மழையில் நனைந்தபடி உலா வந்தபோது "பாவம், மூளையை தொலைத்தவன்" என்றவர்களை பார்த்து "பாவம்,வாழ்க்கையை தொலைத்தவர்கள் " என்று என்னுள்ளிருந்து சொன்னவள் நீ.

என் ஜீவன் உன்னோடு இருக்க என் தேகம் மட்டும் எப்படி இத்தனை ஆண்டு காலம் காற்று குடித்தது என்ற நான் கேட்ட ஒரு நன்னாளில் தான் என் காதல் உனக்கு புரிந்தது என்பதை நான் நம்பவில்லை என்றாலும் நம்பினேன்.

அந்த நேரத்தில் நான் எழுத முற்பட்ட கவிதைகள்(எனவும் சொல்லலாம்) ஒன்றை சொல்வதை விட, இதை படித்து பார். நான் எழுதாவிடினும் எனக்காய் எழுதியதாய் உணர்கிறேன். அய்யனாருக்கு நன்றி

குளத்தினை மூட விரையும்
ஆகாயத் தாமரையென
என் நேசங்கள் பரவுவதை
நீ மிகையென்றும்
போலியென்றும்
தவிர்த்துப்போகாதே.
நீரினடியில்
பற்றுதலுக்காய்
அலைந்துகொண்டிருக்கின்றன
என் மிக மெல்லிய வேர்கள்.

ஒவ்வொரு ரூபாய் நோட்டையும் தூக்கி பிடித்து நடுவில் ஓட்டை பார்த்தவன் நான்.உன்னால்தான் வண்ணத்து பூச்சியின் சிறகுகளை வாசிக்கிறேன்.

இதற்கு முன்னமும் சில பெண்களோடு பழகி இருக்கிறேன்.அப்போதெல்லம் பரிமாறும் முன்னமே வெறும் இலையை தின்றுவிட்டு ருசியில்லை என்றேன். இன்று உன்னால் வயிறு நிரம்பி மனசும் நிறைந்துவிட்டது

நான் தடுமாறிய கணங்களில் எல்லாம் "பூக்களோடு தாவரங்கள் முடிந்து போவதில்லை. கனவுகளோடு வாழ்க்கை கலைந்து போவதில்லை" என்று ஆறுதல் சொன்னவள் நீ. அப்போதெல்லாம் தீபத்திலிருந்து வெளிப்படும் வெளிச்சத்தை போல உன்னிலிருந்து நான் வெளிப்பட்டேன்.

இறுதியாய் நீயும் ஒரு நாள் உன் காதலை சொல்லிவிட்டாய். நீ சென்ற பிறகும் என் நடுக்கம் குறையவில்லை. மழை நின்ற பிறகும் நடுங்கும் மலர்களை போல,ஏன் இத்தனை அதிர்வுகள் எனக்குள்?

அடுத்த நாள் வெகு இயல்பாய் போனது.அன்று இரவு தூங்கும் போதுதான் எனக்கு தோண்றியது, நாம் காதலிக்க தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. அதை நாம் வாய்மொழியாய் சொன்னதுதான் நேற்று. ஒரே நாள் மழையில் ஏரி நிரம்புவதை போன்றதல்ல நம் காதல்.

சிறகுதான் பறவையின் பலம்.அதுவே நனைந்து விட்டால் பாரம். காதலும் அதுப் போலத்தான். எனக்கு பலம் சேர்தத்வள் நீ.பாரமல்ல.

இரவுகள் முழுவதும் உன் ஞாபக கொசுக்கள். புரண்டு புரண்டு படுப்பேன். தூக்கமும் புரண்டு புரண்டு படுக்கும்.உன்னைக் காண வேண்டும் என மனசு அரிக்கும்.ஆனால் எந்த விரல் கொண்டு சொரிந்து கொள்வது? இப்படியாக எத்தனை இரவுகள்?

சில நேரங்களில் உன்னை முத்தமிட வேண்டும் என ஏங்குவேன்.கசாப்புக் கடை கத்தியோடு பூந்தோட்டத்தில் நுழைவதா என விலகி சென்றிடுவேன்.

அப்ப‌டியும் ஒரு நாள் நாம் முத்தமிட்டோம். பூமியை தொடாத குழந்தையின் பாதங்களைப் போல் அத்தனை மிருதுவாய் உன் உதடுகள். இதுதான் முத்தமா? இத்தனை நாள் இது வேறு மாதிரி அல்லவா நினைத்திருந்தேன். ஆனால்,அதை விட நன்றாய் இருந்தது.

Yeh!! Penne!!!



உன்னால் தான்
உன்னால் தான்
கவிதை வடித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
இவ்வுலகம் அறிந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
என்னை மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கையெழுத்து அழகானது
உன்னால் தான்
உன்னால் தான்
இதயம் இடமாறிதுடித்தது
உன்னால் தான்
உன்னால் தான்
இயற்கையை ரசித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கண்விழித்து கனவுகன்டேன்
உன்னால் தான்
உன்னால் தான்
பசி; தூக்கம் மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
தனிமையில் சிரித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கைவிடாதே காதலியே
உனக்காக தான்
உனக்காக தான்
என் உயிறும் உடலும்
உனக்காக தான்...

பேசிவிடு என்னோடு....



நான் கவிதை எழுதத்

துவங்கும் பொதெல்லாம்

என் நினைவு உன்னிடமே செல்கிறது

இந்தக் கவிதையைப் படிக்கும்போது - நீ

எப்படி ரசிப்பாய் என்று........

நான் எழுதிய கிறுக்கல்கள்

கவிதை என்று - உன்னைப்

பார்த்த பின்தான்

புரிந்தது எனக்கு.......

எழுத்துக்களின் அழகு - உன்

பெயரை எழுதும்போதுதான்

தெரிந்தது எனக்கு........

மொழியின் இனிமை

நீ பேசுகையில்தான்

புரிகிறது எனக்கு...........

இதழ்வழி பேசும்

வார்த்தைகளை விட

உன் விழிவழி கூறும்

கவிதைகள் நன்றாய்ப்

புரிகின்றன எனக்கு...........

உன்னைக் கண்ட நாள் முதலாய்

இப்படிப்

புலம்பிகொண்டுதான்

இருக்கிறேன், தினம் தினம்.........

என் புலம்பலின் விடுமுறையாய்

இன்றாவது பேசிவிடு

என்னோடு.

Earn Money